இளைஞர் அணி பணிகள்


தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கழகக் கொடியேற்று நிகழ்ச்சிக்கு ரூபாய் 100, 200 என்று இளைஞர்அணிக்கு வளர்ச்சி நிதியாகப் பெற்று, அதன்மூலம் கிடைத்திட்ட தொகை ரூபாய் 11 இலட்சத்தை - முதலாவதாக தலைமைக் கழகத்தில் ஒப்படைத்து அன்பகத்தைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்று தலைவர் கலைஞர் அவர்களால் 1988, ஜூன் 3ஆம் நாள் அன்பகம் தி.மு.க. இளைஞர் அணி அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும் தி.மு.க. இளைஞர் அணியின் முயற்சியால் இந்த ஆண்டு (2005) அன்பகத்திற்கு பக்கத்தில் இருந்த காலி மனை வாங்கப்பட்டுள்ளது.

கழகம் நடத்தும் விழாக்களையொட்டி நடைபெற்று வந்த ஊர்வலங்கள் - தி.மு.க. இளைஞர் அணி தொடங்கிய பிறகு பேரணி என்று அழைக்கக் கூடிய பெருமையையும் பெற்றுள்ளது.

கழக முப்பெரும் விழா -
அண்ணா அறிவாலயம் திறப்பு விழா -
கோவையில் கழக ஆட்சியின் சாதனை விளக்கப் பேரணி -
திருச்சியில் கழக 6-வது மாநில மாநாடு -
ஐம்பெரும் விழா -
கழகத்தின் 7-வது மாநில மாநாடும் இந்தி எதிர்ப்பு மாநாடும் -
சமூக நீதி பேரணி -
மதுரை மண்டல மாநாடு -
கழக 8-வது மாநில மாநாடு -
சேலத்தில் நடைபெற்ற சிறப்பு மாநில மாநாடு -
நெல்லையில் நடைபெற்ற கழகப் பொன்விழா தொடக்க மாநாடு உள்ளிட்ட விழாப் பேரணிகள் ஒவ்வொன்றிலும் தி.மு.க. இளைஞர் அணி, தன் வெண்சீருடை அணிவகுப்பில் - புதுமை படைத்து முதலிடம் பெற்று விருதுகளையும் - பரிசுகளையும் - பாராட்டுதல்களையும் பெற்றுத் திகழ்கிறது.

1990 - தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிட இயக்க வரலாறு கண்காட்சி முதன்முதலாக அமைக்கப்பட்டது. (அசாம் முதல்வர் மகந்தா கண்காட்சியைத் திறந்து வைத்தார்). அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கழக மாநாடுகள் அனைத்திலும் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி மற்றும் தியாகிகள் மணிமண்டபம் தி.மு.க. இளைஞர் அணிச் சார்பில் அமைக்கப்பட்டது.

எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்ற தாய்க் கழகத்தின் பெருமையினை நிலைநாட்ட, தனியார் கடைகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதி வைக்க தி.மு.க. இளைஞர் அணி பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டது.

1989இல் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி கோவையில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்பட்டது.

1991 அக்டோபர் 12, பெங்களூரில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பட்டுள்ள தடையை நீக்க கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊர்வலங்கள் - பொதுக்கூட்டங்கள் நடத்தி அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கர்நாடக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விலைவாசி உயர்வைக் கண்டித்து 1992 மார்ச் 1 முதல் 10 வரை தமிழகம் முழுவதும் சைக்கிள் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

தடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து, 23.3.1992 அன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

1992 டிசம்பர் 5 முதல் 15 வரை விலைவாசி உயர்வினைக் கண்டித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் பட்டி தொட்டிகள் தோறும் சைக்கிள் பிரச்சாரப் பயணம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

1994 தமிழகம் முழுவதும் கிராமங்கள் - குக்கிராமங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் - பொதுக்கூட்டங்கள் - கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1996 ஜனவரி 5 முதல் 15 வரை சைக்கிள் பிரச்சாரப் பயணம்.

1997 கழக அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

1998 செப்டம்பர் 1 முதல் 7 வரை தமிழகம் முழுவதும் கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் - பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

1999 டிசம்பரில் கழக அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

2000, மார்ச் 10 முதல் 20 வரை கழக அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள் - சைக்கிள் பிரச்சாரப் பயணம்.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இயக்க முன்னோடிகளைக் கொண்டு பயிற்சிப் பாசறை கூட்டங்கள் 22 மாவட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களிலும் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

மக்கள் விரோத ஜெயலலிதா அரசைக் கண்டித்து 2002 அக்டோபர் 21ல் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம். (முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் 10 ஆயிரம் பேரும், மறியலில் ஈடுபட்டு 65 ஆயிரம் பேரும் கைதாகியுள்ளனர்.)

© Copyright 2007, DMK Youth Wing, All rights reserved